மீரா மிதுன் ஒரு பிராடு.! அவரால் தான் நான் பிக் பாஸ் போக முடியல.! புலம்பும் ஷாலு ஷம்மு.!

0
23948
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெறுக்கப்படும் பல்வேறு போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மீரா மிதுனம் அதே லிஸ்ட்டில் இருக்கிறார். மாடல் அழகியான மீரா மிதுன் பல்வேறு மோசடி வழக்கு சிக்கியுள்ளவர். மேலும் இவர் மாடலிங் துறையிலும் ஈடுபட்டு பல்வேறு பெண்களை ஏமாற்றியதாக அபிராமி தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-
Related image

ஆனால், மீரா மிதுன் இற்கு பதிலாக நான்தான் சென்றிருக்க வேண்டும் என்று கூறுகிறார் நடிகை ஷாலு சம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியன் காதலியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. அதன் பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதிலிருந்து அம்மணி படு பேமஸ் ஆகிவிட்டார். அதேபோல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் பரவலாக பரவி வந்தது. ஆனால், இவர் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை.

Image result for alya manasa

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு சம்மு பேசுகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானும் ஒரு போட்டியாளராக செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் எனக்கு பதிலாக மீரா மிதுன் சென்றுவிட்டார். அதற்கு முக்கிய காரணமே அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல வழக்குகளில் மாட்டிக்கொண்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால் தான் அவரை தேர்வு செய்தனர். அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17ஆவது போட்டியாளராக ஆல்யா மானசா தான் செல்லப்போகிறா.ர் ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை கண்டிப்பாக இரண்டு விஜய் டிவி பிரபலங்கள் இருப்பார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது கவின் இருக்கிறார், அதனால் இரண்டாவது விஜய் டிவி பிரபலமாக ஆலியா மானசா செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஆலியா மானசா நடித்து வந்த ராஜா ராணி தொடரும் தற்போது நிறைவடைந்துள்ளது. அதனால் அவர் செல்லக்கூடியது மிகவும் உறுதி தான் என்று கூறியுள்ளார். அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உங்களை அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு , கண்டிப்பாக செல்வேன் என்று பதில் அளித்த ஷாலு சம்மு என்னைப் பற்றிய தவறான கருத்துக்கள் இருந்துகொண்டு வருகிறது அதனால் என்னை நிரூபிக்க நான் கண்டிப்பாக உள்ளே செல்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும், மீரா மிதுன் குறித்து பேசுகையில், அவர் ஒரு பிராடு, அவர் உண்மையான குணமே அது தான். தன்னை பற்றி எப்போதும் பெருமை பேசிக்கொள்வர். அவர் வெளியில் எப்படி நடித்து பலரை ஏமாற்றினாரோ, அப்படிதான் உள்ளேயும் ஏமாற்றி வருகிறார். அவரை பற்றி சொன்னாலே சொல்லிகொண்டே போகலாம் என்று கூறியுள்ளார். ஷாலு ஷம்முவும் ஒரு மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement