கெளரவம் பார்க்காமல் மகளை நிச்சயதார்த்தம் செய்துவைத்த ஆமிர் கான் – மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் தெரியுமா ?

0
552
amir
- Advertisement -

பிட்னஸ் பயிற்சியாளர் உடன் ஆமீர்கான் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஆமீர் கான். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டு திகழ்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இவருடைய நடிப்பிற்காக பத்மஸ்,ரீ பத்மபூஷன், ஃபிலிம் சார் போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.
மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சமூகத்தில் நிகழும் பல அநீதிகளை தட்டி கேட்பது, மூடநம்பிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் சத்தியமேவ ஜெயதே என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியையும் சில வருடங்களுக்கு முன் ஆமீர்கான் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆமிர்கான் திரைப்பயணம்:

இப்படி இவர் பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. ‘ஃபாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் அதிகாரபூர்மாக மறு ஆக்கம் தான் லால் சிங் சத்தா. இந்தப் படத்தில் ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்கி இருந்தார்.

ஆமிர்கான் நடித்த படம்:

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. அதோடு இந்த படம் ரிலீசுக்கு முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட்டில் பாய்காட் டிரெண்ட் வைரலாகி இருந்தது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சுமார் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

ஆமிர்கான் மகள் காதல்:

தங்கல் படத்துக்கு பின் ஆமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த்து இருந்தது. இதனால் அவர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்காமல் ஒரு பிரேக் எடுக்க உள்ளதாகவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், படத்தயாரிப்பில் கவனம் செலுத்தவும் ஆமீர்கான் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஆமிர்கானின் மகள் ஐராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. தற்போது இவருடைய மகள் ஐராவிற்கு 25 வயது ஆகிறது. இவர் மும்பையை சேர்ந்த செலிப்ரட்டி பிட்னஸ் பயிற்சியாளர் நுபுர் ஷிகாரேவை காதலித்திருந்தார்.

ஆமிர்கான் மகள் நிச்சயதார்த்தம்:

இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. இது குறித்து இந்தி திரை உலகில் பரபரப்பாக பேசி இருந்தார்கள். இந்த நிலையில் ஆமீர்கான் தன்னுடைய மகளின் காதலுக்கு கிரீன் சிங்கிள் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து ஐரா மற்றும் நுபுர் ஷிகாரே நிச்சயதார்த்தம் மும்பையில் சிறப்பாக நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றி இருக்கின்றனர். விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement