பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆமீர் கான். இவர் எப்போதுமே வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பார் என்ற நம்பிக்கை அவருடைய ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. சினிமாவில் நடித்த காலம் முதலே பல வெற்றிப் படங்களை கொடுத்த ஆமீர் கான் பிரபல ஹிந்தி நடிகரான தருமேந்திர நடித்திருந்த “யாதோன் கி பாராட்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக்கினார். பின்னாளில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்த ஆமீர்கான் கடந்த 2016ஆம் நடித்திருந்த “தங்கல்” படம் மிகப்பெரிய ஹிட் அடித்து உலகளவில் சுமார் 2000கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குனர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “லால் சிங் சத்தா”. இப்படமானது பிரபல ஹாலிவுட் நடிகர் “டாம் ஹாங்க்ஸ்” நடித்திருந்த “ஃபாரஸ்ட் கம்ப்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்திற்க்காக அமீர் கான் மிகவும் கடுமையாக நடித்திருந்தார், அதோடு பல இடங்களுக்கு சென்று இப்படத்திற்கான ப்ரோமோஷனும் செய்திருந்தார். ஆனால் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியான “லால் சிங் சத்தா” பெரும் தோல்வியை தழுவியது.
ஏற்கனவே இவர் நடித்திருந்த தாங்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு இது ஆமீர் கானின் இரண்டாவது தோல்வியாகும். இதனால் படத்தில் நடிப்பதற்கு சிறிய இடைவெளி விட்டு குடும்பத்துடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் “லால் சிங் சத்தா” படத்திற்கு அடுத்து மற்றொரு ரீமேக் படத்தில் ஆமீர் கான் நடப்பதாக இருந்தார். ஆனால் தொடர் பட தோல்விக்கு பிறகு அப்படத்தின் தயாரிப்பாளராக மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மராத்தியர்கள் பாரம்பரியமாக அணியும் தொப்பியை அனைத்து கொண்டு அவரது முன்னாள் மனைவியான கிரண் ராவுடன் கலந்து கொண்டிருந்தார். இந்த பூஜையில் ஆமீர் கானின் அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த பூஜையில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்திருந்தார். இந்த பூஜைக்கான காரணம் தெரியாவிட்டாலும் இது அடுத்து தொடங்கும் படப்பிடிப்பிற்காக என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை “லால் சிங் சத்தா” பட இயக்குனரான அத்வைத் சந்தன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இப்புகைப்படங்கள் வைரலாகவே இந்த பூஜை அமீர் கானின் தொடர் தோல்வியின் காரணமாகவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்த பூஜையானது மத நல்லிணக்கத்திற்க்கான அடையாளம் என்று கூறுகின்றனர். இவற்றில் எது உண்மை என்று பூஜை செய்தவர்களுக்குத்தான் தெரியும்.
இந்நிலையில் நடிகர் ஆமீர் கான் நடித்திருந்த “சலாம் வெங்கி” படத்தின் சிறப்பு காட்சிகளை காண வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அடுத்த திரைப்படம் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஆமீர் கான் `நான் பல ஆண்டுகாலமாக சினிமாவில் நடித்து வருகிறேன் தற்போது நான் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை கழித்து வருகிறேன் என்ற அமீர்கான் ஒரு ஆண்டிற்கு பிறகு மீண்டும் திரையில் நடிக்க வருவதாக கூறியிருந்தார். மேலும் “சலாம் வெங்கி” திரைப்படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ரேவதி எனக்கு வாய்ப்பு கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.