தப்ப கண்டுபிடிச்சதுக்கு குகூள் வழங்கிய சன்மானம் – கூகுள் முதல் ஆப்பிள் வரை தேடும் ரியல் லைப் கொசக்ஸி பசப்புகழ்.

0
451
Aman
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நண்பன். இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய் அவர்கள் கொசக்சி பசபுகழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

அதாவது ஜாப்பனீஸ், அமெரிக்க என உலகிலேயே மிகப்பெரிய கம்பெனிகளால் தேடப்படும் நபராக கொசக்சி பசபுகழ் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். இந்த நிலையில் தற்போது நிஜத்திலேயே கொசக்சி பசபுகழாக, உலகின் மிகப்பெரிய கம்பெனிகளால் தேடப்படுபவராக இருப்பவர் இளைஞர் அமன் பாண்டே. இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்தவர். இவரை கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களுக்காக வேலை செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

உலகமே தேடும் அமன் பாண்டே:

அப்படி என்ன இவர் செய்திருக்கிறார்? இதனால் ஏன் இவரை உலகிலுள்ள பெரிய கம்பெனிகள் தேடுகிறது? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். அமன் பாண்டே அவர்கள் அப்ளிகேஷனில் உள்ள குறைகளை சொல்வது தான் இவருடைய வேலை. இதற்காகவே உலகின் மிக பெரிய கம்பெனிகள் எல்லாம் இவரை தேடி வருகிறது. அதோடு அப்ளிகேஷனில் உள்ள குறைகளை கண்டு பிடிப்பதில் வல்லவராகத் திகழ்கிறார் அமன் பாண்டே. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் உள்ள அப்ளிகேஷன் ஒன்றில் பிழைகள் இருப்பதை கண்டுபிடித்து கூகுள் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

கூகுள் நிறுவனம் வழங்கிய சன்மானம்:

உடனே கூகுள் நிறுவனம் அமன் பாண்டேவுக்கு பாராட்டை தெரிவித்தது மட்டுமில்லாமல் அவருக்கு 70 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கியது. பின் அமன் பாண்டே இதனை மூலதனமாகக் கொண்டு பக்ஸ் மிர்ரர் என்கிற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். தற்போது இதில் 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது அப்ளிகேஷனில் உள்ள குறைகளை கண்டுபிடித்து தருமாறு அமன் பாண்டேவை தேடி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அமன் பாண்டே அவர்கள் பக்ஸ் மிர்ரர் மற்றும் அதன் துணை நிறுவனமான மனாஸ்-ம் இணைந்து வேலை செய்கின்றது.

-விளம்பரம்-

அமன் பாண்டே கண்டுபிடித்த பிழைகள்:

இதுவரை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து 600 பிழைகளை கண்டுபிடித்திருக்கின்றனர். இதனால் கோடிக்கணக்கில் கூகுள் நிர்வாகம் இவர்களுக்கு சன்மானம் வழங்கி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அமன் பாண்டேவிடம் பேட்டி எடுத்தபோது அவர் கூறியிருப்பது, கூகுள் நிறுவனம் போல் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களின் அப்ளிகேஷன்களின் பிழைகளை கண்டுபிடித்துள்ளோம். நானும், துணை நிறுவனமான மனாஸ்-ம் இணைந்து பல்வேறு அப்ளிகேசன்களில் இருந்து சுமார் 600 பிழைகளை கண்டுபிடித்து உள்ளோம்.

அமன் பாண்டே அளித்த பேட்டி:

இதற்காக கூகுள் நிறுவனம் எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கியது. கூகுள் நிறுவனம், சாம்சங், ஆப்பிள் மட்டுமில்லாது பல இந்திய நிறுவனங்களும் எங்களுடன் பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் கொசக்சி பசபுகழ் என்று டேக் செய்து அவரைப் பற்றிய ஆர்வத்துடன் தேடி வருகின்றனர்.

Advertisement