“நான் அவன் இல்லை” பட பாணியில் மாற்றி கைது செய்துப்பட்ட 84 வயது மூதாட்டி 4 ஆண்டுகளுக்கு பின் விடுவித்த நிதிமன்றம்.

0
1453
- Advertisement -

நான் அவன் இல்லை பட பாணியில் குற்றவாளிக்கு பதிலாக மற்றொரு மூதாட்டியை 4 ஆண்டுகள் சிறையில் வைத்து பின்பு அவர் குற்றவாளி இல்லை என நிதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.இந்நிகழ்வானது கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்றது. 50 வயது பாரதிக்கு பதிலாக தமிழகத்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கேரளாவை சேர்ந்த 84 வயது பாரதியம்மாவை கைது செய்து 4 வருடங்கள் சிறையில் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

50 வயது பாரதி:

கேரளா மாநிலம் பாலக்காடுவை சேர்ந்தவர்  ராஜகோபால். இவரது வீட்டில் பணிக்கார பெண்ணாக 1998 ஆம் ஆண்டு பாரதி என்ற பெண் பணிக்கு சேர்ந்தார். அங்கு ராஜகோபாலின் குடும்ப நபர்களிடம் தகறாரு செய்து வந்த பாரதி அங்கிருந்த பூத்தோட்டிகளை உடைத்தும் கடுமையாக திட்டியதாகவும்  பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் ராஜகோபால் புகார் அளித்தார். அந்த புகாரை வைத்து நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் அந்த பணிக்கார பெண் பாரதியை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

- Advertisement -

அதன் வெளியே வந்த பாரத்தில் தலைமறைவானார். இதனை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகையால் வழக்கு முடிந்ததாக எண்ணிய காவல் துறையினருக்கு அதற்க்கு பின்னர் தான் பெரிய சிக்கல் ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பெண் 50 வயது பாரதி இல்லையென்றும் அந்த பெண் 84 வயது பாரதியம்மா என்பது தான் இதற்க்கு காரணம்

80 வயது பாரதியம்மா:  

ஆள் மாறாட்டம் தான் கைது செய்யப் பட்டதை உணர்ந்த பாரதியம்மா நிதிமன்றத்தை நாடினார். அதற்க்கு முதற் கட்டமாக பாரதி மீது புகார் அளித்த ராஜகோபாலை தேடி கண்டுபிடுத்து நிதிமன்றத்தில் அழைத்து வந்தார் பாரதியம்மா. அதன் பின் ஆள் மாறாட்டம் நடத்து இருப்பதை ஒப்புக்கொண்டார் ராஜகோபால் இது பாரதி இல்லை என்றும் இது பாரதியம்மா என்றும் கூறினார். இந்த வழக்கை மேலும் நடத்த நன் விரும்ப வில்லை என்றும் அவர் கூறினார். அதன் பிறகு இந்த வழக்கு கைவிடப்பட்டு பாரதியம்மா விடுதலை செய்யப்பட்டார்.

-விளம்பரம்-

பாரதியம்மா கூறியவை:          

நான் இது வரை எந்த ஒரு வீட்டிலும் வேலை செய்யவில்லை என்றும், நான் நீண்ட காலமாக தமிழ் நாட்டில் தான் இருந்து வருகிறேன் என்றும்,   கூறினார். எதோ ஒரு காரணத்திற்காக பாரதி என்னுடைய முகவரியை கொடுத்துள்ளார் காவல் துறை தன்னை கைது செய்தபோது நான் அவள் இல்லை என்று கூறியும் நான் கூறியதை அவர்கள் கேட்க வில்லை என்றும் அவர் கூறினார். தற்போது விடுவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.   

Advertisement