பொன்னியின் செல்வன் படம் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட பதிவுக்கு லைகா நிறுவனம் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மிக பிரமாண்டமாக பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படம்:
இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
படம் விமர்சனம்:
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். 70 ஆண்டு கால எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனந்த் மஹிந்திரா டீவ்ட்:
பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவும் பொன்னியின் செல்வன் படம் குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பற்றி அதிகம் தெரிந்த தலைமுறையை சேர்ந்தவன். சோழ சாம்ராஜ்யம் குறித்து அறியாமலையே இருந்ததற்கு வருந்துகிறேன். சோழ சாம்ராஜ்யம் குறித்து நம்ப முடியாத பல தகவல்கள் இந்த படத்தில் ஆதாரங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்
என்று கூறியிருந்தார்.
லைகா நிறுவனம் பதில் டீவ்ட்:
இப்படி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த லைக்கா நிறுவனம் பதில் டீவ்ட் போட்டு இருக்கிறது. அதில் அவர்கள், பொன்னியின் செல்வன் திரைப்படம் உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்று கூறி படத்தின் டிரைலர் வீடியோ லிங்கை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தற்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் டீவ்ட்டும், லைக்கா ப்ரொடக்ஷன் கொடுத்த பதில் டீவ்ட்டும் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.