ஷோரூமில் விவசாயி அவமானம்பட்டதை அடுத்து ஆனந்த் மகேந்ஹிரா போட்ட டீவ்ட்- என்ன சொல்லி இருக்காரு பாருங்க?

0
464
- Advertisement -

கர்நாடக மாநில மகேந்திரா கார் ஷோ ரூமில் நடந்த சம்பவம் குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 190 டாலருக்கு மேல் என்று சொல்லலாம். இவர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவருக்கு கர்நாடகாவிலும் கார் ஷோரூம் உள்ளது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இந்த ஷோரூமுக்கு புதிய ட்ரக்கை வாங்க விவசாயி ஒருவர் சென்றிருக்கிறார். அவர் கர்நாடக மாநிலம் ரமணபாளையாவைச் சேர்ந்த விவசாயி கெம்பே கவுடா.

-விளம்பரம்-

இவர் கடந்த வெள்ளிக்கிழமை தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து துமரகுருவில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமுக்கு சென்றிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த காரை விவசாயி பார்க்க தொடங்கி இருக்கிறார். ஆனால், ஷோ ரூமில் இருந்த சில ஊழியர்கள், கார் வாங்க 10 லட்சம் வேண்டும். உன்னை பார்த்தால் பத்து ரூபாய் கூட இருக்காது போல, உன்னிடம் முதல் பத்து ரூபாய் இருக்கிறதா? என்று கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

விவசாயின் அதிரடி செயல்:

இதனால் கோபம் அடைந்த விவசாயி இன்னும் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் கொண்டு வருகிறேன். இன்றே நீ காரை டெலிவரி செய்து விட முடியுமா? என்று சவால் விட்டிருக்கிறார். பின் வெளியே சென்ற விவசாயி ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தால் கார் ஷோரூமில் இருந்த ஊழியர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கார் வாங்கினால் அதை டெலிவரி செய்ய சில நாட்கள் ஆகும்.

விவசாயி- ஷோரூம் ஊழியர் தகராறு:

ஆனால், விவசாயி பணம் உடனே கொடுத்துவிட்டால் டெலிவரி அன்றே செய்ய முடியுமா என்று சவால் விட்டிருந்தார். இதனால் விவசாயிக்கும் ஷோரூம் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கார் ஷோரூமில் காரை டெலிவரி செய்யவில்லை என்று விவசாயி போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தியது. அதுமட்டுமில்லாமல் ஷோரூமில் ஒரு விவசாயி அவமதிக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியா முழுவதும் வைரலானது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் வைரலான வீடியோ:

இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மகேந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகேந்திராவையும் சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் மகேந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகேந்திரா டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார், அதில் அவர் கூறியிருப்பது, எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமே வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதே, இந்த சமூகமும் எழுச்சி பெறச் செய்வதும் ஆகும்.

ஆனந்த் மகேந்திரா டீவ்ட்:

தனிநபரின் கண்ணியத்தை நிலை நிறுத்துவோம். இந்த நோக்கத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அது மிகவும் அவசரமாக கவனிக்கப்படும். இன்னும் ஊழியர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்க வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இப்படி ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ள ட்விட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement