கம் பேக் கொடுத்தாரா வசந்தபாலன் – அவர் இயக்கி இருக்கும் ‘அநீதி’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
2226
Aneethi
- Advertisement -

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் அநீதி. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகன் குடும்பத்தை சிறு வயதிலே இழந்து தனியாக கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். பின் அவர் வளர்ந்ததும் சென்னையில் மீல் மங்கி என்ற நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்கிறார். அந்த வேலையில் அவர் தினமும் பல பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்திக்கிறார். இதனால் இவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார். இதனால் மன அழுத்தத்தின் உச்சிக்கு சென்ற கதாநாயகன் யார் அவரை கோபப்படுத்தினாலும் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றுகிறது.

- Advertisement -

இதனால் இவர் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் ஒரு பணக்கார வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவி செய்யும் பணி பெண்ணாக கதாநாயகி தூஷாரா விஜயன் இருக்கிறார். இவரையும் அந்த பாட்டி பயங்கரமாக கொடுமை படுத்திக்கிறார். இதனால் இவரும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவர்கள் இருவருக்கும் சந்திக்கிறார்கள். பின் இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்படுகிறது.

மேலும், ஒருவர் பிரச்சனைக்கு ஒருவர் ஆறுதலாக இருவருமே இருக்கிறார்கள். பின் எதிர்பாராத விதமாக இவர்களுக்கு இடையில் ஒரு மரணம் ஏற்படுகிறது. இதனால் இவர்களுடைய வாழ்க்கையில் என்னெல்லாம் நடக்கிறது? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் ஒருவர் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்ற ரோலில் அர்ஜுன் தாசின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் அருமையாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் வாழ்வில் அனைத்தையும் இழந்து தன்னுடைய காதல் மூலம் மீண்டும் புது வாழ்க்கை கிடைக்கும் காட்சிகள் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து தூஷாரா விஜயன் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் சாந்தா தனஞ்ஜெயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் வில்லத்தனத்தில் சிறப்பாக மிரட்டி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஜிவி பிரகாஷ் இசையும் பார்வையாளர்களை கவனிக்க வைத்திருக்கிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதாநாயகியின் பிரச்சனை, அவருடைய தொழில், கதாநாயகி அறிமுகம் என எல்லாமே கோர்வையாக நகர்கிறது . ஆனால், படத்தில் மீண்டும் மீண்டும் வந்த காட்சிகள் வருவதால் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி வேகமாக சென்று இருக்கிறது. ஆனால், கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை கொண்டு போய் சேர்க்கும் வகையில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதோடு கதாநாயகனுக்கு இருக்கும் பிரச்சனை வேலையின் காரணமாகவா? இல்லை சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பிரச்சனையா? என்பதை அவர் தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் கதைக்களத்தை இயக்குனர் கோர்வையாக கொடுத்திருந்தாலும் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.

நிறை:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

இரண்டாம் பாதியில் அருமை

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

ஒருவரின் வாழ்க்கையில் சந்திக்கும் மன மற்றும் பணரீதியான பிரச்சினையை இயக்குனர் சொல்லி இருக்கிறார்

குறை:

கதை களத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

கிளைமாக்ஸ் காட்சியில் தெளிவு இருந்திருக்கலாம்

படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்

சுவாரசியமும் சஸ்பென்சும் இருந்திருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்

மொத்தத்தில் அநீதி- விறுவிறுப்பு குறைவு

Advertisement