படத்திற்கு வரும் விமர்சனங்கள்,பெனிமிசன் பேசுபவர்கள் குறித்து அனிமல் பட இயக்குனர் கொடுத்த பதிலடி.

0
262
- Advertisement -

அனிமல் படம் குறித்து எழுந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு இயக்குனர் கொடுத்த பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அனிமல். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். மேலும், டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புகள் மத்தியில் சமீபத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் தன்னுடைய தந்தை மீது மகன் ஒருவன் அதிக பாசம் வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வதே படத்தின் கதை. இதில் மகனாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அவருடைய தந்தையாக அணில் கபூர் நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் சிறுவயதிலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக அணில் கபூர் இருக்கிறார்.

- Advertisement -

அனிமல் படம்:

இவர் தன்னுடைய மகனை எதற்கெடுத்தாலும் பயங்கரமாக திட்டுகிறார். ஆனால், தன்னுடைய தந்தை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவர் மீது அதிக அன்பை கொட்டுகிறார் ரன்பீர் கபூர். தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படம் வெளியாகி மூன்று வாரத்திலேயே 862 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இந்த படம் பெண்களுக்கு எதிரானது, படம் முழுவதும் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

எதிர்மறை விமர்சனம் குறித்து சொன்னது:

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக இயக்குனர் சந்தீப், ரன்பீர் கதாபாத்திரம் ஆணாதிக்கம் கொண்டதாக பலரும் கூறினார்கள். எனக்கெல்லாம் அப்படி தோன்றவில்லை. 20, 30 ஜோக்கர்களை தவிர அனிமல் படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. படத்தில் இல்லாதது மட்டுமில்லாமல் தவறாக புரிந்து கொண்டு படத்தினை மக்களுக்கு தவறாக பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் போலியான பெண்யவாதிகளாக தான் இருப்பார்கள்.

இயக்குனர் கொடுத்த பதிலடி:

எனக்கு அவர்களைப் பற்றி கவலை இல்லை. மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதோட ரன்பீர், ராஷ்மிகாவின் ப்ரா ஸ்டிரிப்பினை இழுக்கும் காட்சியை பலருமே தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். காதலித்து ஏமாற்றுபவர்கள் வந்தால் அந்த நேரத்தில் ஒருவன் அதை நிரூபிக்க எதை முடியாததோ அதை தான் செய்ய சொல்லுவான். அதற்கும் உடனே இந்த போலியான பெண்ணியவாதிகள் அவமரியாதை செய்து விட்டதாக எழுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது. எனக்கு அந்த ஜோக்கர்களை பார்த்து பயம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement