சித்தார்த்திற்கு ஆதராக விஜய் பேசிய ஆடியோ குறித்த சர்ச்சைக்கு புஸ்ஸி ஆனந்த் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருக்கிறார்.
பிரஸ் மீட்டில் நடந்தது:
அங்கு கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கோஷமிட்டு அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். இதனால் சித்தார்த் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் ஆதரவு:
இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சித்தாத்திற்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பார்த்திபன் என பிரபலங்கள் பலரும் பதிவு போட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயின் லியோ படம் கன்னடத்தில் வெளியாகாது என்ற புது சர்ச்சை தற்போது எழுந்திருக்கிறது. அதாவது, சித்தார்த்திற்க்கு ஆதரவாகவும், கன்னட அமைப்பிற்கு எதிராகவும் விஜய் பேசி இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.
புஸ்ஸிஆனந்த் கொடுத்த விளக்கம்;
அதற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அந்த வீடியோ உண்மை இல்லை. போலியானது. இது குறித்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கன்னடத்தில் படம் வெளியாகாதது குறித்து விஜய் தரப்பில் எந்த ஒரு தகவலும் கூறவில்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.
லியோ படம்:
இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் ஆடியோ விழா செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.