சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் தொலைங்கட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான் என்று சொன்னால் அதற்கு ஈடில்லை. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத். அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்துள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இவரது திருமணம் திடீரென்று நடைபெற்றுள்ளது. தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அனிதா சம்பத்.
இதையும் பாருங்க : முதல் கணவருடன் விவாகரத்து. 43 வயதில் இரண்டாம் திருமணம் செய்த காரணத்தை சொன்ன ஊர்வசி.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மேலும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு பின்னர் மீண்டும் செய்திவாசிப்பாளராக பணியாற்ற துவங்கியுள்ளார் அனிதா சம்பத். இந்த நிலையில் அனிதா சம்பத்தின் திருமணத்தின் போது திருமணமான குஷியில் அனிதா சம்பத் தனது கணவருடன் மண மேடையில் நடனநாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் அனிதா சம்பத் திருமணத்திற்கு பின் செய்தி வாசிப்பாளராக பணியை துவங்கினார்.
சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசித்தேன் என்று குறிப்பிட்டிருந்த இதனை கண்ட ரசிகர் ஒருவர், தாலி எங்கே என்று கேள்வி கேட்க பலரும் அனிதா சம்பத்தை ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், இதற்கு பதில் அளித்துள்ள அனிதா சம்பத், தாலியை கழற்றுவதில்லை மாரித்துக்கொள்வேன். மதத்தை அடையாளப்படுத்தக் கூடாது என்பதற்காக தான் என்று பதில் அளித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.