ஆனால், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த கூட்டணி மீண்டும் இந்த முறை இணையுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. முருகதாஸ் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக ஓது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படம் ஹாலிவுட்டில் வந்த 'மில்லியன் டாலர் பேபி' படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தினை லைகா நிறுவனம் ஒரு பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.
ஒரு வேளை இந்த படத்தினை இயக்க முருகதாஸ் சென்றுவிட்டால், சில டெக்னீசியன்களை தேர்வு செய்து வைத்திருக்கும் விஜய்-62 படம் தள்ளிப்போகுமோ என்ற கவலையில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.




