இதை செய்யாதீர்கள்…! சர்கார் படக்குழுவிற்க்கு முருகதாஸ் விட்ட எச்சரிக்கை..! காரணம் இதோ

0
193
ar-murugadoss

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக “சர்கார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா படு கோலாகளமாக நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய் முதலைச்சராக நடிக்கிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில் அந்த தகவல் பொய் என்று நடிகர் விஜய்யே இசை வெளியிட்டு விழாவின் போது கூறியிருந்தார். இது போலவே இந்த படத்தை பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தில் நடித்த சில நடிகர்கள் பேட்டிகளின் போது “சர்கார்” படத்தின் ஒரு சில தகவல்களை தெரிவித்து வந்தனர்.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அடிக்கடி இணையதளத்தில் வெளியான வண்ணமும் இருந்தது. இது போன்ற விடயங்களால் சற்று வெறுப்படைந்த இந்த படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Murugdoss

அந்த பதிவில்,சர்கார் படத்தில் பணிபுரியும் அணைத்து கலைங்கர்களுக்கும் வணக்கம். இந்த படத்திற்காக பல்வேறு நபர்கள் கடின உழைப்பை போட்டுள்ளார்கள். ஆனால், ஒரு சில ஜூனியர் நடிகர்கள் அளிக்கும் பேட்டிகளில் தொழில் தர்மமின்றி நடந்து கொன்டுள்ளனர். இதுபோன்ற செயலர்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.