இதிலிருந்து தான் உன்னிடம் இருந்து ஒதுங்கிட்டேன் – பிக் பாஸில் நடந்த வீடீயோவை பகிர்ந்து அர்ச்சனாவை Tag செய்த விசித்ரா.

0
193
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கப்பட்டது.

-விளம்பரம்-

பின் 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா எஸ் அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சீசனிலும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, சர்ச்சை, காதல் கலவரம் எல்லாம் நடந்தது. மேலும், இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவர் தான் விசித்திரா. இவர் நிகழ்ச்சியில் நன்றாக தான் விளையாடி இருந்தார். சீனியர் என்ற முறையில் இவர் சொன்ன அறிவுரை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பாரட்டை பெற்று இருந்தது.

விசித்திரா-அர்ச்சனா சண்டை:

இதுவரை வந்த சீசன்களிலேயே சீனியர் நடிகை 95 நாட்களை கடந்து இருந்தார். அதிலும் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்கு ஆதரவாக விசித்ரா இருந்தார்.இது குறித்து கமலுமே பாராட்டி இருந்தார். அர்ச்சனா- விசித்திரா இருவரிடமும் இடையே நல்ல உறவு ஏற்பட்டது. ஆனால், சில வாரங்களிலேயே இருவருக்கும் மத்தியில் சில சர்ச்சைகள் உருவானதால் பிரிந்து விட்டார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் மத்தியில் பெரிய சண்டையே நடந்தது.

-விளம்பரம்-

விசித்திரா பதிவு:

பின் விசித்ரா மாயா உடைய கேங்கில் சேர்ந்து விட்டார். இதனாலே இவர் வெளியேறி விட்டார் என்று சொல்லலாம். அர்ச்சனாவுடன் இருக்கும் வரை விசித்ராவுக்கு ஆதரவு நன்றாக கிடைத்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா உடன் சண்டை போட்டு பிரிந்த நாளை குறித்து விசித்ரா சோசியல் மீடியாவில் பதிவு போட்டு இருக்கிறார். அதில் விசித்ரா ரொம்ப சோகமாக பேசிக் கொண்டிருக்கிறார். மாயா அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

மாயா சொன்னது:

அப்போது மாயா, நீங்கள் யாரையும் நம்பாதீர்கள். உங்களுக்காக நீங்கள் விளையாடுங்கள். உங்களை மட்டும் யோசியுங்கள். தேவையில்லாமல் அதிக அழுத்தத்தை மண்டையில் ஏற்றி கொள்ளாதீர்கள். உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதைப் பார்த்து, மாயாவினால் தான் விசித்திரா இப்படி மாறிவிட்டார் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement