சுதப்பிய நிகழ்ச்சி ஏற்பாட்டுகள், கூட்டத்தில் புகுந்த கோவையன்ஸ், தள்ளு முள்ளு – சுதப்பிய Ar இசை நிகழ்ச்சி.

0
3315
- Advertisement -

ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியில் நடந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் நடிக்கும் பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் `ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நின்று போன இசை கச்சேரி:

மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி செப்டம்பர் 10ஆம் தேதி அதே இடத்தில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் இசை இசை கச்சேரியில் நடந்து இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்று கோயம்புத்தூரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி நடந்திருக்கிறது. இதில் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இசைக்கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே இருந்த ரசிகர்கள் அங்கு விலகி இருந்த திரையின் இடைவெளியில் நுழைந்து வேகமாக ஓடி வந்திருக்கின்றனர்.

வைரலாகும் வீடியோ:

நிறைய பேர் உள்ளே புகுந்ததால் இசை கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். மேலும், 5000 ரூபாய் கொடுத்து நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களுக்கு ஒரு சேர் கூட இல்லை, மிகவும் மோசமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்று நிகழ்ச்சிக்கு சென்ற பலர் புலம்பி வருக்குன்றனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து பதிவு போட்டு வருக்கிறார்கள். இப்படி ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement