இந்தியாவிற்கே பெருமை சேர்த்த தமிழ் சினிமா பிரபலத்தின் குழந்தை. இவர் யார் தெரியுமா ?

0
1479
- Advertisement -

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது புகைப்படங்கள் என்றாலே அது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் தான். அந்த வகையில் இந்த புகைப்படம் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, சூப்பர் ஸ்டார் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். அது வேறு யாரும் இல்லை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகள் தான். ஏ ஆர் ரஹ்மான், கடந்த 1995 ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹீமா, அமீன் என்று மூன்று பிள்ளைகளும் பிறந்தனர். ரஹ்மானின் மூன்று பிள்ளைகளில் கதிஜா ரசிகர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர் தான்.

-விளம்பரம்-

எப்படியெனில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்றுகூறி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த தெளிவான பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்தது. விழா மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார்.

- Advertisement -

இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது. மேலும், ஏ ஆர் ரஹ்மான் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. ஏ ஆர் ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். சமீபத்தில் கூட வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான் மகள், இது ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த தலைப்பு மீண்டும்வந்து உள்ளது. இது நாட்டில் இவ்வளவு நடக்கிறது. ஆனால், அனைத்து மக்களும் கவலைப்படுவது ஒரு பெண் அணிய விரும்பும் உடையின் துண்டு.

arr

ஒவ்வொரு முறையும் இந்த தலைப்பு என்னுள் நெருப்பை உண்டாக்குகிறது நான் கடந்த ஒரு வருடத்தில், பல ஆண்டுகளில் நான் காணாத வித்தியாசமான பதிப்பைக் கண்டேன். நான் பலவீனமாக இருக்க மாட்டேன் அல்லது வாழ்க்கையில் நான் செய்த தேர்வுகளுக்கு வருத்தப்பட மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. எனது பணி பேசும், கடவுள் விருப்பம் . நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள் என்று நெத்தியடி பதிலை கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement