கதவை மூடிவிட்டு 48 மணி நேரமும் திரும்ப திரும்ப அந்த பாடலை கேட்டேன் – தன் உயிரை காப்பற்றிய ரகுமானின் பாடல் குறித்து பதிவிட்ட ரசிகர்.

0
2731
ARRahman
- Advertisement -

தற்கொலை செய்ய முயன்ற நபரை ஏ ஆர் ரகுமான் காப்பாற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

-விளம்பரம்-

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையமைத்து மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

- Advertisement -

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட்,கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்கள்:

சமீபத்தில் தான் இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் உதயநிதியின் நடிப்பில் வந்த மாமன்னன் படத்தில் பணியாற்றி இருக்கிறார். அதனை அடுத்து இவர் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த நபர் ஏ ஆர் ரகுமானால் மனம் மாறி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

தற்கொலைக்கு முயன்ற ரசிகர் :

அதாவது, செல்வகுமார் என்பவர் மலேசியாவை சேர்ந்தவர். இவர் ஒரு இசை கலைஞர். இவர் தனது டீவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இரவு தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். அப்போது என்னுடைய நண்பரிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அவர், ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற நானே வருகிறேன் பாடலை அனுப்பி இருந்தார். அதனை கேட்ட பிறகு என்னுடைய மனம் எப்படி மாறியது என்று எனக்கு தெரியவில்லை.

48 மணி நேரமும் கேட்ட பாடல் :

அதன் பின் நான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். மேலும், நான் வீட்டிற்கு சென்று என்னுடைய ஹெட் போன் மூலம் கிட்டத்தட்ட 48 மணி நேரம் திரும்பத் திரும்ப என்னுடைய அறையை பூட்டிக்கொண்டு அந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். விட்டுக் கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்பானது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ஏ ஆர் ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன் என்று பதில் அனுப்பி இருக்கிறார்.

Advertisement