அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற அடி பூங்குயிலே.. பூங்குயிலே.. என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அரண்மனைக்கிளி காயத்ரி. இவர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சந்தோஸ். இதற்கு முன்பே இந்தியில் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார். அதற்குப்பிறகுதான் ராஜ்கிரன் மூலம் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அரண்மனைக்கிளி படத்திற்கு முன்பே இவர் செம்பருத்தி படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருந்தது.
அரண்மனைக்கிளி காயத்ரி குறித்த தகவல்:
ஆனால், வேறு சில காரணங்களால் அப்படத்தில் காயத்ரி நடிக்கவில்லை. மேலும், அரண்மனைக்கிளி வெற்றிக்குப் பின் இவர் எஜமான் படத்தில் ஹீரோயினியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், மொழி பிரச்சனையால் அந்த படத்தில் நடிக்காமல் காயத்திரி விலகிக் கொண்டார். பின் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். குடும்பம், பிஸ்னஸ் என்று தன்னுடைய இல்லற வாழ்க்கையிலே காயத்ரி கவனம் செலுத்தி வந்தார். இப்போது மீண்டும் காயத்திரி நடித்து நடித்து வருகிறார். தற்போது இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
அரண்மனைக்கிளி காயத்திரி அளித்த பேட்டி:
தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு எனப் பிறமொழி சீரியல்களிலும் காயத்திரி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அரண்மனைக்கிளி காயத்ரி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அரண்மனைக்கிளி படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியிருந்தது, நான் முதலில் செம்பருத்தி படத்தில் நடிப்பதாக தான் பேசப் பட்டு இருந்தது. ஆனால், அந்த படத்தில் நடிகை டஸ்க்கி ஸ்கின் வேண்டும் என்பதால் அந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொண்டேன். அதற்குப் பிறகு தான் அரண்மனைக்கிளி படத்தின் கதையை சொன்னார்கள்.
அரண்மனைக்கிளி பட அனுபவம்:
ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க தயக்கமாக தான் இருந்தேன். அதற்கு பிறகு இந்த படத்தில் இளையராஜா சார் இசை அமைக்கிறார் என்று கேள்விப்பட்டேன். பின் அவர் இசையமைத்த பாடல்களை கேட்டேன். அதிலும் பூங்குயிலே பாடல் கேட்டேன். எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால், அந்த இசை என்னை மிகவும் கவர்ந்தது. உடனே இந்த பாடலில் யார் நடிக்கப் போகிறார்? என்று கேட்டதற்கு இன்னும் தேர்வு செய்யவில்லை என்று சொன்னார்கள். இந்த பாடலை பாடும் கதாநாயகியின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்படித்தான் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.
பாடல் எடுக்க 8 மாதம் ஆன காரணம்:
அதுமட்டுமில்லாமல் அந்த அடி பூங்குயிலே பாடலுக்கு மட்டும் நாங்கள் 8 மாதம் காத்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால், அந்தப் பாடல் முழுவதும் பச்சைபுல், மலை, அருவி கொட்டும் இடங்களில் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள். அதனால் சென்னையில் மழை பெய்யவில்லை. மழை வந்து புல்வெளிகள்,பூக்கள், அருவி என எல்லா இருக்கும் வரை 8 மாதம் காத்திருந்தோம். அதற்கு பிறகு தான் நாங்கள் எடுத்தோம். நாங்கள் நினைத்தை விட பாடல் மிக அருமையாக வந்தது. இன்றும் அந்த பாடலை கேட்டு பலரும் நீங்கள்தானா அரண்மனைக்கிளி காயத்ரி! என்று கேட்கிறார்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.