‘என்னங்க அப்படியே இருக்கு’ – ஏ.ஆர் ரஹ்மான் காப்பி அடித்தாரா? சர்ச்சையில் பொன்னியின் செல்வன் 2 பட பாடல்

0
1111
PS2
- Advertisement -

பொன்னியின் செல்வன் பாடல் காப்பி என்று எழுந்திருக்கும் புது சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் வித்தியாசமான படைப்புகளின் மூலம் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இதனை பல பேர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், படத்தில் கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல முதல் பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம் பெற்ற ‘வீரா ராஜ வீர’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

பாடல் குறித்த தகவல்:

இந்த பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். சங்கர் மகாதேவன், கே எஸ் சித்ரா, ஹரிணி ஆகியோர் இந்த பாடலை பாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் ‘வீரா ராஜ வீர’ பாடல் காப்பி என்ற சர்ச்சை தற்போது எழுந்திருக்கிறது. அதாவது, இந்த பாடல் எங்களின் முன்னோர்களின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது என்று டெல்லியை சேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் வாசிஃபுதின் தாகர் கூறியிருக்கிறார். மேலும், அந்த மூலப் பாடலை தாகர் சகோதரர்கள் ’அடாநா’ ராகத்தில் உருவாக்கியிருந்தனர்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் பாடல் மீது எழுந்த சர்ச்சை:

ஹிந்துஸ்தானி இசையில் பிரபல இசைக் கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் தாகர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1978ல் ஹாலாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த பாடல் அவர்கள் பாடியிருக்கிறார்கள். அதோடு தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்து முறையான அனுமதி பெறாமல் ரகுமான் இந்த இசையை பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். பின் இது குறித்து அவர் ரகுமானுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக கூறியது:

மேலும், இதுகுறித்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் கூறியிருப்பது, ‘வீரா ராஜ வீர’ பாடல் 13ஆம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இப்பாடல் ‘பாரம்பரிய தகர்வணி த்ருபத்’ இசைப்பாணியில் இயற்றப்பட்டது என்பதை திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் விளம்பர லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வாசிஃபுதின் தாகர் தான் பொன்னியின் செல்வன் படத்தின் மீதும் ரகுமான் மீதும் புகார் அளித்திருக்கிறார். இப்படி ஆஸ்கர் நாயகன் ரகுமான் மீது வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Advertisement