உயிருள்ள ஜீவனை பிறந்தநாள் பரிசாக அளித்து அர்ஜுனுக்கு அதிர்ச்சி கொடுத்த மகள்கள்..!

0
179
Arjun-Birthday

பிறந்த நாள் என்றாலே எதாவது சிறிய பொருட்களை பரிசாக வழங்குவது தான் வழக்கம். அதிலும் வசதி படைத்தவர்கள் என்றால் கார்,பைக்,நகைகள் என்று பரிசளிப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்றழைக்கபடும் அர்ஜுனுக்கு அவரது மகள்கள் இருவரும் ஒரு வித்யாசமான பரிசைவழங்கியுள்ளார்.

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளியான “பட்டது யானை” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும், சமீபத்தில் நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த “சொல்லிவிடவா” என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடந்த மாதம் அர்ஜுன் மகள்கள் இருவரும் நடிகர் அர்ஜுனுக்கு குஜராத்தில் இருந்து ஸ்பெஷல் பசு ஒன்றை வாங்கி அதனை பரிசாக வழங்கியுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா. மேலும், அந்த பசுவிற்கு புண்ணியகோட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

Arjun

Actor Arjun

Arjun daughter

Ayswarya

தனது இரு மகள்களின் இந்த வித்யாசமான பரிசினை எதிர்பாரதா நடிகர் அர்ஜுன் மிகவும் சந்தோஷத்தில் திகைத்துள்ளார். மேலும், நடிகர் அர்ஜுனும் தனது வீட்டின் புதிய நபரான புண்ணியகோட்டியுடன் சில புகைப்படங்களை எடுத்து அதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.