நானும் ஓவியா ஆர்மி தாங்க ! ஆரவ்வின் அண்ணன் !

0
6357

“ஆரவ்வுக்கும் எனக்கும் 10 வருஷ இடைவெளி. அவருக்கு நான் அண்ணனாக இருந்ததைவிட அப்பாவாக இருந்து பார்த்துக்கொண்ட நாள்கள்தான் அதிகம். அவரைப் பிரிஞ்சு இருக்கிறது வருத்தமாத்தான் இருக்கு. அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்துடுவேன். `பிக் பாஸ்’ வீட்ல இருந்து ஓவியா போனது வருத்தமாத்தான் இருக்கு. அவர் வெளியே போன பிறகு இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறவங்களோட எண்ணிக்கையும் குறைஞ்சிருக்குனு சொல்றாங்க.

ஓவியா வெளியேறியதுக்கு ஆரவ்தான் காரணம்னு சிலர் சொல்றாங்க. அதை நான் ஏத்துக்க மாட்டேன். அதுக்கு அந்த வீட்ல இருந்த எல்லாரும்தான் காரணம். குறிப்பா காயத்ரி, ஷக்தினு சிலரால்தான் ஓவியா வெளியேற்றம் நடந்தது. அந்தச் சூழல்ல ஓவியாவுக்கு பக்கபலமா இருந்தது ஆரவ் மட்டும்தான். அதனால் அவரை குறைசொல்ல முடியாது, குறை சொல்லவும் கூடாது.

aarav-oviya

தவிர, ஆரவ்வின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் மதிப்போம். தன் எதிர்கால துணை யார் என்பது பற்றி ஆரவ்தான் முடிவுசெய்ய வேண்டும். அதில் நான் குறுக்கிட்டு கருத்து சொல்ல முடியாது. அவர் எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஓகேதான். நான் ஆரவ்வை நம்புகிறேன். அவர் தன் பெற்றோரைப் புண்படுத்தும் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். தவிர, நிகழ்ச்சியைப் பார்க்கும் சிலர் நெகட்டிவாகப் பேசினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ஆரவ் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் இந்த விளையாட்டை நேர்மையாக விளையாடி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

Aarav-chooses-Oviya

வெளியே இருக்கும் பலர் ஆரவ்வை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக பெண்களின் சப்போர்ட் ஆரவுக்கு உண்டு. அதேபோல் ஆண்களின் ஆதரவு ஓவியாவுக்கு இருந்தது. நான் இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டிருக்கிறேன். ஆமாம், ஐ சப்போர்ட் ஆரவ் அண்ட் ஓவியா. ஆரவ் `பிக் பாஸ்’ டைட்டிலை ஜெயித்தால் சந்தோஷம்.”