ரூ. 1.79 சம்பள பாக்கி..! பிரபல தாயாரிப்பாளர் மீது அரவிந்த்சாமி வழக்கு..!

0
218

இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “சதுரங்கவேட்டை” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி நாகராஜ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தை காமெடி நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார்.

Thani-Oruvan

இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா. மேலும், “சதுரங்கவேட்டை 2” படத்தில் நடிகர் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், நடிகை த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ஒரு வ்ருட காலம் ஆன நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தனக்கு பேசப்பட்ட சம்பள தொகையான 1.79 கோடியை தொகையை படத்தின் தயரிப்பாளர் தரவில்லை என்று மனோபாலா மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.

aravindswamy

இந்த வழக்கின் விசாரணை நேற்று (செப்டம்பர் 11) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரவிந்த்சாமிக்கு சம்பளபாக்கி தராமல் இருப்பதற்கான காரணம் குறித்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடிகர் மனோபாலா தரப்பினர் விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.