ஒவ்வொரு ஆண்டும் ஷோபாவின் கல்லறைக்கு வந்து இரண்டு கடலை மிட்டையாய் வைத்து கும்பிடும் உதவி இயக்குனர். பின்னால் இப்படி ஒரு காரணம்

0
252
- Advertisement -

42 ஆண்டுகள் சினிமாவில் தொலைத்துவிட்டேன் என்று துணை இயக்குனர் ஹரிஹரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் துணை இயக்குனராக இருந்தவர் ஹரிகரன். தற்போது அவருக்கு 63 வயதாகிறது. இவருடைய அப்பா திருச்சியில் உணவகம் வைத்திருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பம் நிலை குலைந்து போனது. இதனால் தன்னுடைய படிப்பை நிறுத்தி திருச்சி முருகன் டாக்கீஸில் வேலைக்கு சேர்ந்தார் ஹரிகரன்.

-விளம்பரம்-

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு நுழைந்து 42 வருடங்கள் ஆகியும் போராடி வருகிறார். போராடியும் சாதிக்க முடியாமல் போனது. இவர் தன்னுடைய படத்தின் பெயரை சூட்கேசில் ஒட்டிக்கொண்டு தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து கூறியிருப்பது, என்னுடைய மொத்த வாழ்க்கையையும் சினிமாவிலேயே தொலைத்து விட்டேன். இனிமேல் அதை எப்படி வெளியில் எடுப்பது என்று தெரியவில்லை.

- Advertisement -

ஹரிஹரன் பேட்டி:

நான் குடும்ப சூழ்நிலைக்காக டாக்கீஸ் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது தியேட்டரில் தான் சினிமா ஆசை உருவானது. படங்களின் பெயர்களை போர்டில் எழுதுவேன், ஆபரேட் இல்லாத நேரத்தில் படம் ஓட்டுவேன். இதனால் எனக்கு பாலச்சந்தர் மாதிரி ஒரு இயக்குனராக வேண்டும் என்று ஆசை வந்தது. இதனால் ஒரு நாள் நான் லாரியில் ஏறி சென்னைக்கு வந்து விட்டேன். கையில் பத்து பைசா கூட இல்லை. ஐந்தாறு படங்களில் நான் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் இப்படியே டீ வாங்கி கொடுத்து வாழ்க்கை வீணாகப் போய்விடும் என்று தோனியது. பின் உணர்ச்சிகள் படம் பெரிதாக போய்க்கொண்டிருந்தது.

சினிமாவில் நுழைந்த அனுபவம்:

அந்த படத்தை 15 முறைக்கு மேல் பார்த்தேன். நேரா இயக்குனர் ஆர் சி சக்தியை பார்த்து உதவி இயக்குனராக சேர்த்துக்கோங்க என்று கேட்டேன். யார் கிட்டயும் வேலை செஞ்சி இருக்கியா? வேலை தெரியுமான்னு கேட்டார்? தெரியாதுன்னு சொன்னேன். அப்புறம் எதுக்குடா இங்க வந்த என்று சொன்னார். படம் பார்த்த பதினைந்து டிக்கெட்டையும் அவர் முன்னாடி எடுத்து வைத்தேன். சிரிச்சிட்டே படத்தோட கதையை சொல்லுடான்னு சொன்னார். கடகடவென்று சொன்னேன். சரி நாளைக்கு பெட்டி படுகை எடுத்துக் கொண்டு வந்து விடு என்று சொன்னார்.

-விளம்பரம்-

ஹரிஹரன் சினிமா வாழ்க்கை:

அதற்குப் பிறகு அவர் எடுத்த எல்லா படங்களிலும் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருந்தேன். அவர் வசன உதவி ஹரி என்று டைட்டில் போடுவார். சக்தி சார் இறந்த பிறகு வேற இயக்குனர் தேட ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு நிறைய பேரிடம் கதையும் சொன்னேன். அர்ஜுன், பிரபுதேவா போன்ற பிரபல நடிகர்களிடம் எல்லாம் கதை சொல்லப் போனேன். அவர்கள் என்னுடைய கதையை கேட்காமல் அலட்சியம் செய்தது எனக்கு ரொம்ப மன வேதனை அளித்து இருந்தது. தன்மானத்தை விட்டு விட்டு அவங்க ரெண்டு பேருக்கும் கதையை சொல்லி இருந்தால் இன்னைக்கு வெற்றிகரமாக நான் இயக்குனராக கூட இருந்திருக்கலாம்.

ஹரிஹரன் எடுக்கும் படம்:

பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி எனக்கு முதுகு வலி வந்துவிட்டது. செக்யூரிட்டி வேலைக்காவது போ என்றெல்லாம் திட்டினார்கள். ஒரு கட்டத்தில் நீ செத்து கூட போயிருக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள். என் மனசு துடித்தது. 43 வருடம் சினிமாவில் போராடி என்னுடைய வாழ்க்கையை தொலைத்தேன். தோற்றுவிட்டேன் என்று இன்னொரு வேளையில் இறங்க மனசு இடம் கொடுக்கவில்லை. என் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் சந்தோசமாக கூட்டிட்டு போய் தியேட்டரில் உட்கார வைப்பேன். கண்டிப்பாக போராடி என்னுடைய படத்தை திரையிடுவேன். ஒரு பேய் கதை தயார் பண்ணி வைத்திருக்கிறேன். படத்தினுடைய பெயர் தினசரி மூன்று காட்சிகள். எப்படியும் ஒரு மாதத்திற்குள் படம் தொடங்கிவிடுவேன். வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என்று உற்சாகத்திலும் தன்னம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்.

Advertisement