இயக்குனர் அட்லீ தயாரித்திருக்கும் ‘பேபி ஜான்’ படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் குறித்த தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தளார் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் முதலில் இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன்பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
அட்லீ குறித்த தகவல் :
கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் முதன் முதலில் ஹிந்தி படத்தை தயாரித்திருக்கிறார்.
பேபி ஜான் படம் :
அதாவது தமிழில் அட்லீ இயக்கி, தளபதி விஜய் நடித்து பயங்கர ஹிட்டான ‘தெறி’ படத்தினுடைய இந்தி ரீமேக்கை தயாரித்திருக்கிறார். ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ஹிந்தியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் காளீஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசானது.
வசூலில் சரிவு :
பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அட்லீ தயாரித்திருக்கும் படம் என்பதாலே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை காப்பாற்றும் விதமாக படத்தில், சல்மான் காலின் கேமியா கதாபாத்திரம் முதல் நாள் திரையரங்குகளை அதிர வைத்துவிட்டது. இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் சுமார் ₹ 11.25 கோடி வசூல் செய்து இருந்தது. ஆனால், இரண்டாவது நாளை 60% குறைந்து வெறும் ₹ 4 .75 கோடி தான் வசூல் செய்தது.
தெறி படம்:
அதை தொடர்ந்து , நேற்று மூன்றாவது நாள் இப்படம் ₹ 3.65 கோடி வசூல் செய்திருக்கிறது. அதனால் முதல் மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் ரூபாய் 20 கோடியை கூட கடக்க வில்லையாம். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியான படம் தான் ‘தெறி’. இயக்குனர் அட்லீ இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய், சமந்தா, எமி இப்படத்தில் ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாக செம ஹிட் அடித்தது. வெறும் 75 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து குறிப்பிடத்தக்கது.