நயனின் முதல் பாலிவுட் படம், பூரித்து போன விக்னேஷ் சிவன் – எச்சரித்த ஷாருக்கான். Cuteஆன ட்விட்டர் உரையாடல் இதோ.

0
1596
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

- Advertisement -

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பிரிவியு வீடியோ வெளியாகி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் தனது மனைவியின் முதல் பாலிவுட் என்ட்ரி குறித்து பதிவிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் “இயக்குனர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பதை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது. ஜவான் பட ப்ரிவியூ சர்வதேச தரத்தில் இருக்கின்றன. நிறைய முயற்சிகள் கடின உழைப்புகள் பொறுமைகள் அதில் உள்ளன. அட்லீக்கு ஒரு பெரிய ஹக்! ஹாட்ஸ் ஆப்!

-விளம்பரம்-

பாலிவுட்டில் எனது கிங் ஷாருக்கான் உடன் அறிமுகமானதற்கு நயன்தாராவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அனிருத் இசையில் மிரட்டி இருக்கிறார். விஜய் சேதுபதிக்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறி இருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு பதில் அளித்த ஷாருக்கான் ‘அனைத்து அன்புக்கும் நன்றி. நயன்தாரா மிகவும் அருமையானவர். ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன். உங்களுக்கு முன்பே தெரியும்.

ஆனால் ஒரு கணவராக , ஜாக்கிரதையாக இருங்கள், அவர் இப்போது சில பெரிய அடி உதைகளை கற்றுக் கொண்டுள்ளார்’ என்று கேலியாக பதிவிட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் ‘‘ஆமாம் ஜாக்கிரதையாக தான் இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில் அவர் காதல் மன்னனிடம் இருந்து நல்ல ரொமான்ஸ் செய்யவும் கற்றுக் கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement