‘பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது’ டிடியின் புத்தாண்டு புகைப்படம். அட்வைஸ் செய்த ரசிகர்கள்.

0
84877
dd
- Advertisement -

எப்போதும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று இவரைச் சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும்,தொகுப்பாளினி டிடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. திவ்யதர்ஷினிக்கு சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களுடன் நட்பு இருந்தாலும் அவருடைய பேவரட் எப்போதுமே தளபதி விஜய் மற்றும் நயன்தாரா தான்.

இதையும் பாருங்க : கிளாமரில் தாராளம் காட்டும் தாராளபிரபு பட நடிகை. வைரலாகும் புகைப்படங்கள்.

- Advertisement -

தொகுப்பாளினி டிடி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் டிடி அவர்கள் தமிழ் புத்தாண்டு அன்று தன்னுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் தமிழ் புத்தாண்டு தினம் முடிவடைந்தது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று திவ்யதர்சினி அவர்கள் கேரளா சேலை அணிந்து நயன்தாரா ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது திவ்யதர்சினி புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திவ்யதர்சினி நடிகை நயன்தாரா போல் இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதே நேரத்தில் உங்களுடைய பச்சை நரம்புகள் தெரிகிறது. நல்லா சாப்பிடுங்க என்று அன்புக் கோரிக்கையும் வைத்து உள்ளார்கள் ரசிகர்கள். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் எந்த ஒரு நிகழ்வுகளையும் கொண்டாட முடியாமல் போனதது. மேலும், திவ்யதர்ஷினி அவர்கள் தனது நீண்ட நாள் காதல் கணவரை திருமணம் செய்து கொண்டார்.

பின் திருமணம் ஆன குறுகிய மாதங்களிலேயே திவ்யதர்ஷினிகும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இருவரும் பிரிய முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார் டிடி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement