அட்லீயின் பேவரைட் அஜித் படங்கள் இது தானாம். ரசிகர் கேள்விக்கு அட்லீ ட்வீட்.

0
19766
Ajith Atlee
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் அட்லி. மெர்சல் படத்திற்கு பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார். என்னதான் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தாலும் இவர் இயக்கி வரும் படங்கள் என்னவோ பெரும்பாலும் காப்பி கதைகளாகத்தான் இருந்து வருகிறது. இவர் இறுதியாக இயக்கிய மெர்சல் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைகளை குவித்தது இருப்பினும் இந்த படம் ரஜினி நடித்த மூன்று முகத்தின் அச்சு அசல் காப்பி என்று பலருக்கும் பச்சையாக தெரிந்தது.

-விளம்பரம்-

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் அட்லீ. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைய இவருக்கு விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த படமும் வெற்றியடைய மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள அட்லீ, விஜய்யை வைத்து ‘பிகில்’ படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படமும் திருடபட்ட கதை தான் என்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது.

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆஹா ஓஹோ என்று பேசப்பட்டு வந்தாலும், நடுநிலை சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்று வருகிறது. எப்படி சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கினாரோ அதே போல அட்லீயும் விஜய்யை வைத்து 4 படங்களை இயக்காமல் விடமாட்டார் என்று தான் தோன்றுகிறது.

-விளம்பரம்-

ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் விஜய் – அட்லீ கூட்டணியில் படம் வேண்டாம் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். இந்த நிலையில் பிகில் படம் வெளியாவதற்கு முன்பாக அட்லீயிடம் கேளுங்கள் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் #AskAtlee என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ரசிகர்கள் சிலர் அட்லீயிடம் கேள்விகளை கேட்டு வந்தார்கள். அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அட்லீயும் பதில் அளித்து வந்தார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அட்லீயிடம், தல அஜித் பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு அட்லீ, அஜித் சார் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை இருக்கிறது. அவருடைய சமீபத்திய படங்களில் எனக்கு பிடித்தது, விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என்று ட்வீட் செய்துள்ளார். இந்த பதிலை கண்டதும் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? உடனே, அட்லீ அடுத்து தல அஜித்தை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று கமன்ட்களை அல்லி வீசி வந்தனர்.

Image result for atlee"

இதுமட்டுமல்லாமல் பிகில் படத்தை தொடர்ந்து அட்லீக்கு பாலிவுட் அழைப்பு வந்ததாகவும், நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ ஒரு படத்தை இயக்க போவதாகவும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், அந்த படத்தில் அட்லீயின் சம்பளம் 30 கோடி என்றும் கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனவே, பிற்காலத்தில் அஜித் – அட்லீ கூட்டணியில் படம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்.

Advertisement