துணிவு பட நடிகர் kgf துணிக்கடை விக்கி மீது பாய்ந்த வழக்கு – என்ன காரணம் தெரியுமா?

0
530
- Advertisement -

சென்னையில் வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் கே ஜி எப் என்ற பெயரில் துணிக்கடை இருக்கிறது. இதை விக்கி என்ற விக்னேஷ் நடத்தி வருகிறார். இங்கு துணி எடுக்கும் வரும் நபர்களை பேசியே தன் பக்கம் கவர்ந்திருக்கிறார் விக்கி. குறிப்பாக, youtube நடத்தும் நபர்களிடம் நையாண்டி, கலாட்டா பேசி தன் கடைக்கு விளம்பரம் செய்திருக்கிறார்.இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்து வைக்கிறார். சமீபத்தில் இவர் கடையில் உள்ள துணியை உட்காரும் நாற்காலி போல எப்படி பயன்படுத்துவது என்று பேசி வெளியில் இருக்கும் வீடியோ எல்லாம் மிக வைரல் ஆகி இருந்தது.

-விளம்பரம்-

சோசியல் மீடியா முழுவதுமே இவருடைய வசனங்களும் ரில்ஸ்களும் அதிகமாக வைரலாகி கொண்டிருக்கின்றது. இதனால இவர் சீக்கிரமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.அது மட்டும் இல்லாமல் இவருக்கு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விக்கி நடத்தி வரும் கேஜிஎப் துணிக்கடையின் மீது எழுந்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, கே ஜி எஃப் துணிக்கடையில் குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கிறார்கள். அதன் பேரில் அதிகாரிகள் உடனடியாக ரெய்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.பின் அங்கு வேலை செய்த சிறுவர்களை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், அவர்களை சிறுவர்கள் இல்லத்தில் வைத்து உரிமையாளர் விக்கி இடம் விசாரணையும் நடத்தி இருக்கிறார்கள்.

அப்போது விசாரணையில் விக்கி, தீபாவளி நேரம் கடையின் வியாபாரத்தை தடுக்க தான் இப்படி வேணும் என்று என் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர்  தலைமையில், குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்பு குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் சேர்ந்து மூன்று கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து, பணியில் இருந்த தொழிலாளர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொற்ப சம்பளத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக பணியில் இருப்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 பேரில் ஒரு சிறுவன் தப்பியோடிய நிலையில் மற்ற மூவரையும் குழந்தைதள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்து குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்பு குழு அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்திய காரணத்திற்காக கே.ஜி.எப் துணிக்கடையின் உரிமையாளர் விக்னேஷ் மீது வண்ணாரப்பேட்டை போலீசார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Advertisement