ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்துள்ள ‘ அவள் பெயர் ரஜினி’ விமர்சனம் – டைட்டிலை போல வித்தியாசமான படம்.

0
621
- Advertisement -

இயக்குனர் வினில் வர்கீஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அவள் பெயர் ரஜினி. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், பிரியங்கா சாய், ரெபோ மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ காளிதாஸ் ஜெயராமின் மாமா நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தார். பின் திரும்பி வரும் வழியில் அவரை மர்மமான முறையில் யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அவரைக் கொன்றது யார்? என்ற தேடுதலில் காளிதாஸ் ஜெயராம் இறங்குகிறார். அப்போதுதான் இவருக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. அதெல்லாம் என்ன? அந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? இதையெல்லாம் காளிதாஸ் ஜெயராம் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

- Advertisement -

படத்தின் கதை:

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு எளிமையான கதை. வழக்கமான பழிவாங்கல் கதை தான். இதை கொஞ்சம் திரில்லர் பானியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். அதோடு சில இடங்களில் சுவாரசியத்தையும் இயக்குனர் கொடுத்திருப்பது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காளிதாஸ் வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படம் முழுக்க அவரே சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் ஒரு நல்ல கதைகளை கொண்டு சென்று இருக்கிறார். தன்னுடைய அக்கா வாழ்க்கையை காப்பாற்றுவதற்கும், தன்னுடைய மாமாவை கொன்றவனை கண்டுபிடிக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவர் அடுத்து படத்தில் திருநங்கையாக பிரியங்கா சாய் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் அருமை.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இரண்டாம் பாதியில் வேற லெவல் கலக்கி இருக்கிறார். இவர்களுடன் படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க சென்றால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சாதாரண பழிவாங்கல் கதை என்றாலும் சுவாரசியத்தையும் சில விஷயங்களையும் இயக்குனர் காண்பிப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், ஆரம்பத்தில் திருநங்கை குறித்து அவர் தவறாக சித்தரிக்கும் காட்சிகளை காண்பித்திருப்பது கொஞ்சம் வருத்தத்துக்குரிய விஷயமாக இருந்தாலும் இறுதியில் அவர்களுக்கான மரியாதையை கொடுத்திருக்கிறார்.

சில இடங்களில் திருநங்கைகளுக்கான தேவையை தெளிவாக சொல்லி இருக்கலாம். அதோடு சில காட்சிகளை யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது. அதை தவிர்த்து இருந்து இருந்தால் நன்றாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

காளிதாஸ் ஜெயராம் நடிப்பு ஓகே

கதைக்களம் ஓகே

பின்னணி இசை நன்றாக இருக்கிறது

இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு

திருநங்கை குறித்து நிறைய விஷயத்தை இயக்குனர் சொல்லி இருக்கிறார்

குறை:

பழிவாங்கல் கதை

கிளைமாக்ஸில் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம்

சில இடங்களில் தேவையில்லாத வசனங்கள்

மொத்தத்தில் அவள் பெயர் ரஜினி -ரசிகர்களுக்கு ஆச்சரியம்

Advertisement