பாகுபலி 3யில் நடிக்க ஆசைப்படுகிறேன்.! வெளிப்படையாக விருப்பத்தை தெரிவித்த அவெஞ்சர்ஸ் நடிகர்.!

0
489
- Advertisement -

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படமாக அமைந்த பாகுபலி படம் மாபெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட மிகச் சிறந்த வெற்றிகரமான திரைப்படங்களில் ஒன்றான சர்வதேச விருதுகளை வென்றதில் இருந்தது இந்த திரைப்படம்.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமௌலி மிகவும் கவனிக்க தகுந்த இயக்குனராக திகழ்ந்தார். பாகுபலி என்ற தலைப்பில் தொடர்ச்சியாக ராஜமௌலி இயக்கிய இரண்டு பாகங்களும் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. இதன் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் விருப்பம் ஹெரிவித்துள்ளார். சாமுவேல் எல் ஜாக்சன், உலகம் முழுவதும் பிரபலமடைந்த அவெஞ்சர்ஸ் படத்தில் நிக் ஃப்யூரி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

Bahubali-2

தற்போது வெளியாகியுள்ள கேப்டன் மார்வெல் படங்களில் நிக் ஃப்யூரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் படத்தில் தாங்கள் நடிக்க விருப்பப்பட்டால், எந்த படத்தில் நடிக்க ஆசைப்படுவீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாலிவுட் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், பாகுபலி மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டால், அதில் நிச்சயம் தான் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement