அடிச்சது லக்கி பரிசு..!விஜயுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

0
1016
Ayswaryarajesh

சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில் டித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

- Advertisement -

சமீபத்தில் இவரரது நடிப்பில் வெளியாகியுள்ள “வட சென்னை” படத்திலும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

Vijaydeverkonda

-விளம்பரம்-

கிரந்தி மாதவ் இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இவருடன் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோக ட்விட்டரில் விஜய் தேவரகொண்டாவுடனான புகைப்படத்தை பதிவிட்ட அவர், `தெலுங்கில் எனது புதிய படம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement