தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடியிருக்கிறார். தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார். இந்நிலையில் இவர்கள் கடந்த ஆண்டு பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களை சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் இணைத்து விட்டனர் என்ற செய்தி வெளியானது ஆனால் அது அதிகாரபூர்வ தகவல் கிடையாது.
லால் சலாம் :
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய வாழ்க்கையின் தற்போது பார்த்து வருகின்றனர். நடிகர் தனுஷ் நடித்த “வாத்தி” படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது, இதனையடுத்து “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். அதே போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ கதாபாத்திரம் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதாநாயகன்களாக நடிக்கின்றனர்.
மகன்களின் பள்ளியில் நடந்த விழா :
மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் “லால் சலாம்” படத்தை இயக்குவதால் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவை ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆன்மீக பயணம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகன் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது தாய் லதா ரஜினிகாந்த கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு மகன்கள் ரிலே போட்டியில் முதல் பரிசை தட்டி சென்று கோப்பையை வென்றனர். இது குறித்து ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் ஒரு வசனத்தையும் எழுதியுள்ளார்.
இன்ஸ்டா பதிவு :
அதில் “எத்தனை வெய்யில் இருந்தாலும் இந்த குழந்தைகளின் விளையாட்டுத் திறனை நிறுத்த முடியாது. அவர்கள் காலை வெயிலில் ஒளி பிரகாசத்தில் ஓடுகின்றனர். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, என் மகன்களைப் பார்த்து சிரித்து பிரகாசிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கணவர் நடிகர் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.