படப்பிடிகள் எதுவும் இல்லாததால் கெட்டப்பை மாற்றிய ஆயுத எழுத்து சரண்யா – கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
932
saranya
- Advertisement -

சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார்.பின் சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

- Advertisement -

இறுதியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து ‘ சீரியலில் நடித்து வந்தார்.ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சரண்யா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆயுத எழுத்து சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை.

அதற்கான காரணம் தெரிந்ததும் நானே அதை சொல்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது சீரியல் எதுவும் இல்லாததால் சுதந்திரமாக இருக்கும் சரண்யா, சமீபத்தில் தனது தலைக்கு கலர் அடித்துக்கொண்டார். இதை பார்த்த பலரும் சரண்யாவை லோ பட்ஜெட் Bilie Ellise மாதிரி இருக்கீங்க என்று கலாய்த்து வருகின்றனர், ஒரு சிலரோ இந்த லுக் உங்களுக்கு பொருந்தவில்லை என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement