இனியாவால் ராதிகாவிற்கு வந்த சோதனை, ராதிகா-ராமமூர்த்தி இடையே மாட்டி கொண்டு கோபி படும் பாடு

0
362
baag
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் நாள் எல்லா பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதிலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமுமே கோபி மீது கோபத்தில் இருக்கிறது.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில், இனியா பள்ளியில் போனை பார்த்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரவேண்டும். இல்லையென்றால், டி சி கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ஆனால், இனியா வீட்டில் சொல்லாமல் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து பள்ளிக்கு வரவைற்கிறார். இதை அறிந்த பாக்யா கோபமாக இனியாவிடம் கேட்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே இனியா செய்தது தவறு என்று அவரை கண்டிக்கிறார்கள்.

-விளம்பரம்-

வீட்டை விட்டு வெளியேறிய இனியா:

ஆனால், இனியா தான் செய்தது தவறு இல்லை என்பது போலவே பேசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரியும், பாக்கியாவும் இனியாவை திட்டி அடித்து விடுகிறார்கள். பின் கோபத்தில் இனியா வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அப்போது கோபி, இனியாவை தன்னுடைய வீட்டிற்க்கே அழைத்துச் செல்கிறார். இனியாவும், நான் என்னுடைய அப்பா உடனே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் பாக்யா வீட்டில் உள்ள எல்லோருமே கவலையில் இருக்கிறார்கள். பின் கோபியின் அப்பா ராமமூர்த்தி இனியாவை அங்கே விடக்கூடாது என்று கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார்.

கோபி அப்பா செய்யும் சேட்டை:

ஆனால், இதை எல்லாம் பார்த்து ராதிகாவுக்கு பிடிக்காமல் கோபி மீது கோபப்படுகிறார். பின் ராதிகா சமைத்து எல்லோரையும் சாப்பிட கூப்பிடுகிறார். அப்போது ராமமூர்த்தி, ராதிகா செய்த சமையலை கிண்டல் செய்கிறார். ராதிகா, கோபியை பார்த்து முறைக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் கோபி இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். கூடிய விரைவில் ராமமூர்த்தி எதிர்பார்த்த மாதிரி இனியா தன் அப்பாவின் சுயரூபத்தை அறிந்து கொள்வார். அதேபோல் ராதிகாவிடம் கோபிப்படும் பாடு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement