பாக்கியாவிற்கு எதிராக திரும்பும் மொத்த குடும்பம், துணையாக நிற்கும் ராதிகா- பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்.

0
207
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பரபரப்பான உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தற்போது சீரியலில் செழியன் தன்னுடைய கம்பெனி ஓனர் மாலினி உடன் நெருக்கமாக பழகி இருந்தார். பின் ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை உணர்ந்து செழியன் ஜெனி இடமும், குழந்தை இடமும் அன்பாக நடக்கிறார். ஆனால், செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று மாலினி நினைக்கிறார். பின் கோபி உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன ஈஸ்வரி, கோபியை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த ராதிகா பாக்கியா வீட்டிற்கு மீண்டும் வந்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமும் திகைத்து நிற்கிறது. இப்படி இருக்கும் நிலையில் செழியனை மாலினி அவரை தொந்தரவு செய்கிறார்.

உண்மையை அறியும் பாக்கியா:

ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல் செழியன் எல்லா உண்மையும் அவருடைய அம்மா பாக்யாவிடம் சொல்லி விடுகிறார். பின் மாலினியை நேரில் சந்தித்து எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிறார் பாக்கியா. ஆனால், மாலினி, என்னை செழியன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நான் சும்மா விடமாட்டேன் என்று கொந்தளித்து செல்கிறார். பின் நேரடியாகவே என்று பாக்கியா வீட்டிற்கு எல்லா உண்மையும் மாலினி சொல்கிறார். முதலில் எல்லோரும் மறுக்கிறார்கள். பின் தன்னிடம் இருந்த போன் ஆதாரத்தை மாலினி காண்பித்தவுடன் எல்லோருக்குமே அதிர்ச்சியாகி விடுகிறது.

-விளம்பரம்-

வீட்டை விட்டு வெளியேறும் ஜெனி:

அது மட்டும் இல்லாமல் மாலினி, இந்த உண்மை எல்லாம் பாக்கியாவிற்கும் தெரியும் என்று சொன்னவுடன் ஜெனி என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியாகி விடுகிறார். மொத்த வீடுமே பாக்கியா பக்கம் திரும்பி விடுகிறது. பாக்யாவின் மீது கோபப்பட்டு ஜெனி வீட்டை விட்டு சென்று விடுகிறார். இந்த உண்மை எல்லாம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இன்னொரு பக்கம், வீட்டில் உள்ள எல்லோரும் செழியன் செய்த தவறை தட்டிக் கேட்காமல் பாக்யா மறைத்தது தான் தவறு என்று வழக்கம்போல் பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கோபத்தில் ராதிகா:

இதை பார்த்த ராதிகா பொங்கி எழுந்து, செழியன் செய்த தவறை யாரும் கேட்காமல் அதை சொல்லாமல் விட்டது தான் தவறு என்று பாக்கியவை கேட்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். செழியனை யாராவது ஒரு கேள்வி கேட்டீர்களா? என்று கொந்தளித்து பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி, இது எங்கள் குடும்ப விஷயம். நீ தலையிடாதே, கோபி அவளை உள்ளே கூட்டிக்கொண்டு போ என்று கடுமையாக பேசுகிறார். இனி வரும் நாட்களில் பாக்யாவிற்கு ராதிகா துணையாக நிற்பாரா? செழியன் என்ன செய்யப் போகிறார்? ஜெனி நிலைமை என்ன? என்ற அதிரடி திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement