காத்துவக்குல ரெண்டு கணவர் – அமிர்தாவின் வாழ்வில் நிகழப்போவது என்ன? செம ட்விஸ்டில் பாக்கியலட்சுமி

0
688
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவரை தொடர்ந்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பாக்கியா கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். இன்னொரு பக்கம் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை பாக்கியாவுக்கு தெரியும்.

சீரியல் கதை:

அதே சமயம் செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று மாலினி நினைக்கிறார். ஒரு கட்டத்தில் செழியன் எல்லா உண்மையும் அவருடைய அம்மா பாக்யாவிடம் சொல்லி விடுகிறார். ஜெனி-செழியன் பிரிர்ந்து இருக்கிறார்கள். கடந்த வாரம் சீரியலில் பாக்கியா பொருட்காட்சி நடத்தும் இடத்தில் சமைக்கும் ஆர்டரை எடுத்திருக்கிறார். வெற்றிகரமாக அந்த ஆர்டரை பாக்கியா செய்து கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் மகன்களின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறார் பாக்கியா.

-விளம்பரம்-

பாக்கியா மகன்கள் நிலைமை:

தற்போது சீரியல் ஜெனி அப்பா விவாகரத்து நோட்டீசை செலியனுக்கு அனுப்பி விடுகிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ந்து போகிறார்கள். இது குறித்து கேட்டால் இரு குடும்பத்துக்கும் இடையே சண்டை வருகிறது. ஆனால், விவாகரத்து செய்வதில் ஜெனிக்கு உடன்பாடு இல்லை. செழியன் இதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். தற்போது வீடே சோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோவில், எழில்-அமிர்தா இருவரும் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

அப்போது அமிர்தாவை அவருடைய முதல் கணவர் கணேஷ் பார்க்கிறார். அதை பார்த்தவுடன் அமிர்தா மயக்கம் போட்டு விழுகிறார். அமிர்தாவை எழில் தாங்கும் போது அவருடைய முதல் கணவர் கணேஷ் அமிர்தா கையைப் பிடித்து தாங்க பார்க்கிறார். இதை பார்த்து எழில் அதிர்ச்சி அடைகிறார். இனிவரும் நாட்களில் செழியன்- ஜெனி விவாகரத்து நடைபெறுமா? எழில்- அமிர்தாவின் நிலைமை என்ன? பாக்கியலட்சுமி என்ன செய்யப் போகிறார்? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியஸ் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement