BB Jodigal சீசன் 2 Finale – முதல் இரண்டு இடத்தை பிடித்த ஜோடி யார் தெரியுமா ? நீங்க எதிர்பார்த்தது தான்.

0
742
bbjodigal
- Advertisement -

பிபி ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
BBJodigal

பின் பாவனி 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். மேலும், இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள்.

பாவனி-அமீர் காதல்:

அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்தவுடனே அமீர்- பாவனி இருவருமே வெளியே சுற்றி இருந்தார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர்.

-விளம்பரம்-

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். ஆனால், பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். கூடிய சீக்கிரத்தில் நல்ல பதில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்து இருக்கிறது. அதோடு நிகழ்ச்சியில் இவர்கள் தான்
வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி வின்னர்:

இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 வின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிந்துள்ளது. அதில் அமீர் மற்றும் பாவணி இருவரும் டைட்டில் வென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் இடத்தை சிவாஜி தேவ் – சுஜா பிடித்து இருக்கின்றனர். முதல் சீசனில் சாரிக் மற்றும் அனிதா சம்பத் வெற்றி பெற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement