விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது விஜய் டிவி.
ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா – ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் – ஷாரிக், அறந்தாங்கி நிஷா – தாடி பாலாஜி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு – மோகன் வைத்தியா, ஜூலி – சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.
சீசன் 1 வெற்றியாளர்கள் :
மேலும், பாத்திமா பாபு – மோகன் வைத்தியா மற்றும் ஜூலி – சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று (செப்டம்பர் 19 ) ஒளிபரப்பானது. இதில் அனிதா – ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
பிக் பாஸ் போட்டியாளர் அல்லாத போட்டியாளர்கள் :
இப்படி ஒரு நிலையில் BB ஜோடியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிரியங்கா – ராஜு, இசைவாணி – வேல்முருகன், ஐக்கி பெரி – தேவ், சுருதி – அபிஷேக், கணேஷ்கர் – ஆர்த்தி, பாவணி – அமீர், சிவகுமார் – சுஜா வருணி, பார்த்தசாரதி – தாமரை, ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். அதே போல டேனியல் ஜோடி இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு இருகிறார்.
ராஜு – பிரியங்கா காம்போ :
இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது பிக் பாஸில் கலந்து கொள்ளாத போட்டியாளர்கலும் இதில் கலந்துகொண்டு இருக்கின்றனர். குறிப்பாக ஐக்கி பெரியுடன் ஜோடி சேர்ந்துள்ள தேவ், அவரின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீசனில் ராஜு – பிரியங்கா போட்டியாளர்களா அல்லது தொகுப்பபாளர்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த காம்போ மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ராஜு கொடுத்த விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் தரும் வகையில் ராஜு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் இந்த சீசனில் தான் ஒரு Anchor தான் என்பதை உறுதி செய்து இருக்கின்றார். கடந்த சீசனில் தீனா மற்றும் ஈரோடு மகேஷின் Host சரியாக ஈடுபடவில்லை என்பதால் அவர்கள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் தான் நடுவர்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.