விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.
அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக இந்த சீரியல் குறித்து வந்த மீம்கள் குறித்து பேசி உள்ளார் ரோஷினி. இது குறித்து பேசியுள்ள அவர், ‘இந்தப் புள்ளய இன்னும் எவ்வளவு தூரம்யா நடக்க விடுவீங்க’ன்னு வடிவேலுவையும் துணைக்குக் கூப்பிட்டு ஒரு மீம் போட்டார் அந்தப் புண்ணியவான்.அந்த மீம் அப்படியே ஷேர் ஆக, அப்படியே தமிழ்நாடு மேப், இந்தியா மேப், உலக மேப் எல்லாத்தையும் வச்சு நாடு கடந்து, கடல் கடந்து நடந்துட்டே இருக்கிற மாதிரி தினமும் மீம் போடத் தொடங்கிட்டாங்க.
எல்லாத்துக்கும் உச்சமா ஒருத்தர், ’ஆம்ஸ்ட்ராங், ஆல்டரினுக்கு அடுத்து மூணாவதா மூனுக்குப் போன ஆள் நம்ம கண்ணம்மாடா’ன்னு, என்னை நிலவுல நடக்க விட்டு, என் கண்ணுல தண்ணி வரவச்சிட்டார். ‘ரசிகர்கள் கொண்டாடு றாங்களே’ன்னு சீரியல்லயும் அடுத்த பத்து நாளைக்கு ‘நடங்க’ன்னே விட்டுட்டாங்க. சேனல் வரலாற்றுலயே ரேட்டிங்ல நம்பர் ஒன் வந்தது இப்பத் தானாம். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா? அதுவும் கேமரா முன்னாடி நிக்கவே தெரியாம சீரியலுக்கு வந்த எனக்கு முதல் சீரியல்லயே இப்படி யொரு அங்கீகாரம், அன்னைக்கு நான் சந்தோஷத்துல தூங்கவே இல்லை.