தமிழகமே இன்று தளபதி விஜய்யின் 46-வது பிறந்தநாளை சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறது. பொதுவாகவே ஜூன் 22 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் திருவிழா போன்று கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் நாடே கொரோனா அச்சுறுத்தலில் இருப்பதால் தனது பிறந்தநாளை விமர்சனமாக கொண்டாட வேண்டாம் என்று விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து இருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு தளபதி விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் முதல் முன்னணி திரைபிரபலங்கள் வரை என பலரும் சமூகவலைதளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான இயக்குனரான பாரதிராஜா அவர்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்திருக்கிறார். பாரதிராஜா அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பது,
என்கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழக இளைஞர்களின் சொத்தாக உலகமே கொண்டாடப்படும் “விஜய்க்கு” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும், நையாண்டி, நக்கலுக்கான அந்த உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள் அதிலும் மேலாக கோடிக்கனக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக்கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில் எல்லா சிறப்பும் பெற்று நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வயலின் வாசித்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு பிறந்த நாள் தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரீலிஸ் தேதிக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றனர்.