பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாடி பாலாஜி சந்தித்த முதல் நபர்.! யார் தெரியுமா..?

0
436

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது, கடந்த வாரம் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற ஜனனியை தவிர மற்ற அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். அதே போல இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பாலாஜியும், ஞாயிற்றுக்கிழமை யாஷிகாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.

balaji

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் வெளியில் வந்தவுடன் தனது நண்பர்களையோ அல்லது பிக் பாஸ் போட்டியாளர்களையோ சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருவதைத்தான் வாடிக்கையாக வைத்து வந்தனர்.

ஆனால், மற்ற போட்டியாளர்களை விட பாலாஜி வித்யாசமாக ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை நேரில் செந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாலாஜி சமீபத்தில் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

balaji-stalin

ஸ்டாலினை சந்தித்ததால் ஒருவேளை பாலாஜி தி மு கவில் இணையவிருக்கிறாரா என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக பிக் பாஸ் மேடையில் கமலிடம் பேசிய பாலாஜி, கமலின் மக்கள் நீதி மைய கட்சியில் சேர விரும்புவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.