ரசிகர்களிடம் திமிராக பேசிய மைனா நந்தினி, வைரலாகும் வீடியோ – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
620
myna
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியான தொடங்கி 50 நாட்கள் ஆகிறது இந்நிலையில் நேற்று போட்டியாளர்களிடம் மக்கள் கேள்விகளை கேட்டிருந்தனர். அதில் ஒருவர் மைனா நந்தினியிடம் கேட்ட கேள்விக்கு எகத்தாளமாக பதிலளித்த மைனா மீது நெட்டிசனைகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன்6ல் இதுவரை ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஷ்வரி, நிவாஷினி போன்றவர்கள் வெளியேறினர். இந்நிலையில் அடுத்த வெளியேறப்போவது ராமாக இருக்க கூடும் என்று தகவல் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

ஆனால் ராம் தொடக்கத்திலேயே எக்விக்ஷ்னில் இருந்து தப்பித்து விட்டார். அதற்கு பிறகு மணிகண்டனும் ராபர்ட் மாஸ்டரும் இருந்தனர், மணிகண்டனின் அலட்சியத்தை உணர்த்தும் படி கமலஹாசன் ஒரு வேலை செய்து ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ராபர்ட் மாஸ்டர் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்பத்தின் நினைப்பு வந்துவிட்டதால் தானாகவே வீட்டிற்கு செய்வதாகக் கூறிவந்த ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நிகழ்விற்கு பிறகு பிக் பாஸ் சீசன்6 தொடங்கி 50 நாட்கள் ஆகியதால் போட்டியாளர்களை பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதில் தனலட்சிமி மற்றும் அசீமை போட்டியாளர்கள் பாராட்டுமாறு கூறினர். அதன் பின்னர் கதிரவனை நீங்கள் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துளீர்கள் என்று கேட்ட ரசிகை ஒருவர் ஒருவேளை நீங்கள் அனுபவத்திற்காக வந்திருந்தால் உங்களை பார்க்கும் எங்கள் நிலைமையை கொஞ்சம் எண்ணி பாருங்கள் என்று கலாய்த்தபடி கூறினார்.

இதனையடுத்து பேசிய மற்றொரு ரசிகை ரட்சிதா மற்றும் மைனா நந்தினியை பார்த்து உங்களுடைய சம்பளம் கொடுக்கும் சுற்றுலா எப்படி போகிறது என்று கேலிசெய்தார். இதற்க்கு பதிலளித்த ரட்சிதா மற்றும் மைனா எங்களால் முடிந்த அளவிற்கு வரும் நாட்களில் சிறப்பாக விளையாடுவதாக உறுதியளித்தனர். பின்னர் பேசிய மைனா நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

-விளம்பரம்-

உங்களால் முடிந்தால், எனக்கு போன் செய்து வாக்களியுங்கள், இல்லையென்றால் என்னை ஒழியுங்கள் என்று நக்கலாக பதிலளித்தார்.இப்படி ரசிகை கேட்ட கேள்விக்கு எகத்தாளமாக பதிலளித்த மைனாவின் பதில் பார்வையாளர்களிடமிருந்து அதிக வெறுப்பைப் பெற்றது. தன்னை வளர்த்துவிட்ட ரசிகர்களையே கலாய்க்கும் படி பேசிய மைனா நெட்டிசன்கள் மத்தியில் விமர்ச்சனத்திற்குள்ளாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement