5 ஆண்கள் 8 பெண்கள் – பிக் பாஸின் முதல் 13 போட்டியாளர்களின் லிஸ்ட்.

0
59158
biggboss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது . கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
biggboss

இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

தமிழில் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது. அதையே அவ்வப்போது கட் செய்து புதிய ப்ரோமோ போல வெளியிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று காலை புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் பிக் பாஸ் குரலோடு ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார் பிக் பாஸ்.

1. ரியோ ராஜ்
2. சூப்பர் சிங்கர் அஜீஸ்
3. பாலாஜி முருகதாஸ் (மாடல்)
4. ஜித்தன் ரமேஷ்
5. ஆரி
6. அனிதா சம்பத்
7. அறந்தாங்கி நிஷா
8. ரம்யா பாண்டியன்
9. ரேகா
10. ஷிவானி நாராயணன்
11. சனம் ஷெட்டி
12. அர்ச்சனா
13. கேப்ரல்லா

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் பற்றிய லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட போட்டியாளர்கள் தான் இருக்கின்றனர். அதே போல இந்த லிஸ்டில் 8 பெண் போட்டியாளர்கள் மற்றும் 5 ஆண் போட்டியாளர்கள் என்று மொத்தம் 13 பேரின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

Advertisement