விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இந்த இரண்டு சீரியல்கள் நிறுத்தப்பட்டத்தை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் சில மாற்றங்களை செய்துள்ளது விஜய் டிவி. அதன்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ தொடர் இனி இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே போல இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தேன்மொழி பி.ஏ’தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இனி இரவு 8.00 – 8.30 மணி வரை ஒளிபரப்பாகும். ‘பாரதி கண்ணம்மா’ தொடர் 8.30-9.30 மணி வரை ஒளிபரப்பாகும். விஜய் தொலைக்காட்சியில் வரும் 4 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 4 துவங்க இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஆரம்பம் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அதை தொடர்ந்து 5 ஆம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.