விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம்!

0
679
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் இறுதி போட்டிக்கு தகுதியாகி இருந்தனர். ஒருபுறம் ஷிவின் வெல்வார் என்றும் சிலர் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் கோப்பையை அசீம் வென்றார். விக்ரமன் இரண்டாம் இடத்தையும் , ஷிவின் இடத்தையும் பிடித்தனர்.

-விளம்பரம்-

இது பலருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது மேலும் பலர் அப்போ அராஜகம் செய்தால் வெற்றி பெற்று விடலாமா என்று விஜய் டிவியையும், பிக் பாஸ் தொகுப்பாளர் கமலஹாசனையும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் மூன்றாவது இடத்தை பிடித்த ஷிவின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

திருநங்கை ஷிவின் :

திருநங்கை ஷிவின் ஒரு மாடல் ஆவார், ஷிவின் அவருடைய வீட்டில் ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதன் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிக் பாஸ் வீட்டில் சிவின் கணேசன்:

அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா தன்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக ஒரு திருநங்கை நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரையில் சென்று வந்துள்ளார் என்ற பெருமையை ஷிவின் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

பாரதி கண்ணம்மா சீரியல் :

எந்த நிலையில் தான் ஷிவின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

கிளைமாக்ஸ் காட்சியில் ஷிவின் :

இப்படி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது என்று சோசியல் மீடியாக்களில் பரப்பலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் கிளைமாக்ஸ் காட்சியில் தான் திருநங்கையான ஷிவின் கணேஷ் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஷிவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் பாரதி கண்ணம்மா என டாக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த தகவல் ஷிவின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement