தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ஆதரவாளர்கள், அஸீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல்.

0
674
kajal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் கடந்த இரண்டு தினங்களாக விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் அசீம் வெற்றி மிகவும் தவறான ஒரு உதாரணம் என்று கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதியாலும் அஸீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து நடிகை காஜல் அசிமிற்கு எதிராக அடிக்கடி பதிவுகளை போட்டு வந்தார். இதனால் அசீம் ரசிகர்கள் இவரை அடிக்கடி அவதூராக பேசி வந்தார்கள். அதேபோல அசின் இந்த சீசனில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் காஜல் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘ ‘ஏய் எப்புட்றா’ என்ற templeteஐ பகிர்ந்து ‘எங்கேயுமே உண்மையான நாகரீகமான நல்லவங்களா, நேர்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் அணித்தனமாக நிரூபிக்கும் சமூகம்”என்றும் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விக்ரமன் அளித்த பேட்டியை காஜல் தான் எடுத்திருந்தார். அப்போது அசிமிற்கு எதிராகவே பல விஷயங்களை கூறிய காஜல், விக்ரமன் எப்படி இந்த சீசனில் தோற்றார் என்றும் விக்கிரமனிடம் ஆதங்கப்பட்டார். இந்த பேட்டிக்கு கீழ் பல அசிம் ரசிகர்கள் காஜலை திட்டி தீர்த்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அசின் ரசிகர்கள் சிலர் ‘அதான் உன் புருஷன் உன்ன விட்டு போய்ட்டானா டி’என்று கமெண்ட் செய்து காஜலை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசி இருந்தார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காஜல் என்று பதிவிட்டு இருக்கிறார். , ‘காப்பி பேஸ்ட் செய்யும் நாய்களே, உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டு போயிட்டா? என்று பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸீமிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement