பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வேலை ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது.
பிக் பாஸ் 7:
இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஆறு பேரும் கடைசி வரை இருப்பார்களா? இந்த வாரமும் மிட் வீக் எவிக்ஷன் நடந்து யார் வெளியே செல்வார்கள்? என்று தெரியவில்லை.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
ஆக மொத்தம், டைட்டிலை அடிக்கப் போவது யார் என்ற பல கேள்விகளுடனும், எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த வாரத்தின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக பைனல் நிகழ்ச்சியை நடத்த பிக் பாஸ் குழு ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த நிலையில் போட்டியாளர் ஒருவர் மருத்துவமனையில் இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பவா செல்லத்துரை குறித்த தகவல்:
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பவா செல்லதுரை. இவர் எழுத்தாளர். ஆனந்த விகடனில் நிறைய கட்டுரைகள் கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறார். இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் நுழைந்த ஒரு சில வாரத்திலேயே இவர் உடல்நல குறைவு காரணமாக வெளியேறி விட்டார். இருந்தாலும் நிகழ்ச்சியில் இருந்த சில நாட்களில் இவர் சொல்லிய கதை எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது.
மருத்துவமனையில் பவா செல்லத்துரை:
பின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இவர் குறித்து வெளியான விமர்சனங்களுக்கு விளக்கமும் கொடுத்திருந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதோடு இவருக்கு ஒரு அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. அது எதற்கு? என்ன? என்று தான் தெரியவில்லை. ஏற்கனவே இவர் நெஞ்சுவலியின் காரணமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.