ஆரிய பத்தி நான் அப்படி சொல்லவே இல்ல, தப்பா போடாதீங்க – ஆஜீத் விளக்கம்.

0
32341

ஆரியை பற்றி நான் சொன்னது வேறு ஆனால் யூடியூப் பேட்டியின் தலைப்பில் போட்டுள்ளது வேறு என்று பிக்பாஸ் போட்டியாளரான அஜீத் விளக்கம் தெரிவித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார்.

இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பிரபலங்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித்தும் ஒருவர். திருச்சியை சேர்ந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் இந்த சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது. மேலும், இந்த சீசனில் ஆஜீத் காலிக்கு Most Stylish Singer என்ற விருது கூட வழங்கப்பட்டது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு திக்கி தெணறது தேவதை (Thikki Thenarudhu Devatha) என்ற ஆல்பம் பாடலை பாடி இருந்தார்.

- Advertisement -

அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மூன்றாவது வாரமே வெளியேற்றப்பட்டார். ஆனால், அப்போது இவருக்கு கிடைத்து இருந்த Eviction Free Pass மூலம் தப்பித்துவிட்டார். அதன் பின்னர் இவர் ஒரு சில வாரங்களில் நாமினேஷனில் இடம்பெற்றாலும் அந்த வாரம் இவரை விட மக்களை வெறுப்பேற்றிய போட்டியாளர்கள் மீது கவனம் போனதால் இவர் எலிமினேஷனிலிருந்து தப்பித்துவிட்டார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இவர் வெளியேற்றப்பட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் யடுயூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஆரி, தான் ஜெயிப்பாரு, ஆரி தான் டைட்டில் வின்னர் என்று தலைப்புகளை போட்டு யூடுயூப் சேனல்கள் வீடியோவை வெளியிட்டது. ஆனால், தான் அவ்வாறு கூறவில்லை என்றும் ‘ஆரியும் வெற்றியாளராக இருக்கலாம் என்று தான் சொன்னேன். அவர் தான் வெற்றியாளர் என்று சொல்லவில்லை, தவறான தலைப்புகளை போட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement