கொரோனாவால் இறந்த திருமாவளவனின் அக்கா – இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக Get Well Soon சொன்ன பிக் பாஸ் நடிகை.

0
1661
thirumavalavan
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.சமீபத்தில்கூட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

சினிமா பிரபலங்களை தாண்டி அரசியல் பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா. தமிழக ஆளுநர் புரோஹித், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அமைச்சர் செல்லூர் ராஜு, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இப்படி ஒரு நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனின் சகோதரி பானுமதி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

சிதம்பரம் தொகுதி அமைச்சரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவனின் அக்கா பானுமதி என்பவர் தான் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் இந்த செய்தியை பகிர, அதற்கு பிரபல நடிகையான காஜல் அகர்வால், RIP சொல்வதற்கு பதிலாக Get Well Soon (விரைவில் நலமடையுங்கள்) என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement