கவின் சாதனையையும் சேர்த்து பிக் பாஸ் வரலாற்றிலேயே ஆரி செய்துள்ள சாதனை.

0
4822
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Aari screams out loud after the Bigg Boss episode- reveals why! | பிக் பாஸ்  வீட்டின் கார்டன் ஏரியாவில் கர்ஜித்த ஆரி- வெளியான காரணம்! - Dailyanjal - No  1 Latest News in Tamil | Breaking

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. ஆரி மீது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் முன்வைத்த குறை என்னவென்றால் அவர் எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருக்கிறார் என்பது தான்.

- Advertisement -

ஆனால், கமலே அந்த குணத்தை விடாதீர்கள் என்று கூறி இருந்தார்.இந்த சீசனில் சோம் சேகர் டிக்கட் டு பினாலே டாஸ்க்கில் வென்று இறுதி போட்டிக்கு முதல் ஆளாக தகுதி பெற்றிருந்த நிலையில் ஆரி இரண்டாம் பைனலிஸ்ட்டாக தகுதி பெற்று இருந்தார். அதே போல ஆரி தான் இந்த சீசன் வின்னர் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆரி, பிக் பாஸ் வரலாற்றிலேயே புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

அதாவது இதுவரை ஒளிபரப்பான மூன்று பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பங்குபெற்ற எந்த போட்டியாளர்களை விடவும் ஆரி தான் அதிக முறை நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்ட போட்டியாளர் என்ற சாதனையை செய்துள்ளார். இந்த சீசனில் ஆரி, 11 முறை நாமினேட் செய்யப்பட்டு காப்ற்றப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மூன்றாம் சீசனில் பங்குபெற்ற கவின் 8 முறையும், இரண்டாம் சீசனில் பங்குபெற்ற மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் முதல் சீசனில் பங்குபெற்ற ஆரவ் ஆகியோர் 7 முறை நாமினேட் ஆகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement